Home உலக செய்திகள் பிரித்தானியாவில் – ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணம் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1150...

பிரித்தானியாவில் – ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணம் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1150 ஐ தாண்டியது!

97
0

பிரித்தானியாவில் COVID-19 தாக்கத்திற்கு உள்ளாகி இறந்தவர்கள்இன் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணமடைந்திருப்பது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை COVID-19 வைரஸ் தாக்கத்தினால் கூடுதல் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மட்டும் 1152 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா நோய் தொடர்பில் 32,757 பேர் வரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக NHS தெரிவிக்கின்றது.

நாளுக்கு நாள் மக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டும், நோய்த் தொற்றின் பரவல் பல மடங்காக கூடிக்கொண்டும் செல்லும் இவ் வேலையில் பிரித்தானியாவில் மக்கள் நடமாட்டங்கள் வெகுவாக குறைந்துள்ளன.

இந்த நோயினால் இன்னும் ஒரு வாரத்தில் இறப்போர் எண்ணிக்கை 2000 ஐ தாண்டும் எனவும் இம் மாத இறுதிக்குள் 5000 வரை செல்ல வாய்ப்புக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.