Home உலக செய்திகள் லண்டனில் – சமூக நலன் கருதி நிறுத்தப்படும் தமிழர் நிகழ்வுகள்!

லண்டனில் – சமூக நலன் கருதி நிறுத்தப்படும் தமிழர் நிகழ்வுகள்!

110
0

லண்டநில் கொரோனா தொற்று நோய்த் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக “சமூக நலன் கருதி” பல தமிழர் நிகழ்வுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் எப்போது நடாத்தப்பௌம் என்பது தொடர்பான அறிவிப்புக்களை தாம் பின்னர் அறியத்தருவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று நோய் பரவலாக்கத்தை தடுக்கவும், உயிர் இழப்புக்களை குறைக்கவும் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அமைய தமிழர்களும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கமைய லண்டனில் இம் மாதமும், ஏப்ரல் மாதமும் நடைபெறவுள்ள ஏனைய தமிழர்களின் பொது நிகழ்வுகளும் திகதிகள் மாற்ரப்பட்டு பிற்போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 21 நடைபெற இருந்த “அபயம் இசை நிழ்ச்சி”

லண்டன் சைவத் திருக் கோயில்கள் ஒன்றியத்தின் “21வது சைவ மாநாடு”

லண்டன் தமிழ் நிலையத்தின் தமிழ் பாடசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன், தவணைப் பரீட்சையும் பிற்போடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் தமிழ் நிலையம் ஏப்ரல்18 இல் நடாத்த இருந்த “தமிழ் நிலைய மாலை”

21வது சைவ மாநாடு தொடர்பான போட்டி நிகழ்ச்சிகள்

ஆகிய பொது நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு அதன் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர தமிழ் குடும்பங்கள் பலரது கொண்டாட்ட நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.