Home உலக செய்திகள் பிரித்தானியாவில் 24 மணித்தியாலங்களில் 208 பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் 24 மணித்தியாலங்களில் 208 பேர் பாதிப்பு!

118
0

பிரித்தானியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் 19 பேர் நோய் தொற்றிற்கு இலக்காகியுள்லமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வேல்ஸிலும் 38 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதி வேகமாக பரவிவரும் இந்த நோய் தொற்றில் இருந்து உயிர்களைக் காக நாட்டுத் தலைவர்கள் விரைந்து நடவடிக்கை எடுகவேண்டும் என உலக சுகாதார அமைப்பு பணிப்புரை விடுத்துள்ள நிலையில் ஐரோப்பாவின் அதிக நாடுகளில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரித்தானியாவிலும் எதிர்வரும் வாரம் முதல் பாடசாலைகளை மூடுவதற்கும், 500 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் பொது நிகழ்வுகளுக்கும் தடை விதிக்க புதிய சட்ட நகல் ஒன்று குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பிரதான நிகழ்வுகளாக கருதப்பட்ட உதைபந்தாட்டம், மரதன் போன்ற நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.