Home உலக செய்திகள் கொரோனா நோய் தொற்றால் 596 பேர் பாதிப்பு – 10 பேர் மரணம்!

கொரோனா நோய் தொற்றால் 596 பேர் பாதிப்பு – 10 பேர் மரணம்!

167
0

பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோயினால் இதுவரை 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று இரவு வரையில் 10 பேர் குறித்த நோயினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவின் “தேசிய சுகாதார சேவை (NHS)” அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த நோய் அதி தீவிரமாக பரவிவரும் நிலையில் பாடசாலைகளை மூடுமாறு இதுவரை 343,214 பேர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள போதும் இதுவரை பாடசாலைகள் மூடுவதற்கான அறிவிப்பை பிரித்தானிய அரசாங்கம் அறிவிக்கவில்லை.

பிரித்தானிய அரசாங்கம் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கத்தின் நன்மை கருதியும், அரசாங்கத்தின் வருமானங்களையும் மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எளுந்துள்ளன.

இதற்கு உதாரணமாக, கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான ஒருவரின், இருமல், மற்றும் தும்மல் மூலம் அதிகளவில் பல்லின மக்கள் செறிந்து காணப்படும் மத்திய லண்டன் பகுதியில் மிக நெரிசலோடு பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலக்கீழ் தொடரூந்து சேவையை இதுவரை பிரித்தானிய அரசாங்கம் நிறுத்தவில்லை. முகங்களோடு முகங்கள் முட்டியபடி மிக நெருக்கமாக பயணம் செய்யும் போது அதிலேயே அதிகளவாக பலருக்கும் நோய்த் தொற்று வர வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

நேற்று இடம்பெற்ற “கோப்ரா” ஒன்றுகூடலில் ஏனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், ஒன்றுகூடலின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது. 10,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவ்அர் என எதிர்பார்க்கிறோம். இந்த நோயினால் பல குடும்பங்கள் தங்களது, தங்களது உறவுகளத்உ உயிர்களை இளக்கவுள்ளன.

இருப்பினும், மக்கள் அச்சமடைய தேவையில்லை. இது இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே தொடரும் என சாதாரணமாக கூறி சென்றமை வேடிக்கையாக இருந்தது.

இதே வேளை அயல் நாடான பிரான்ஸில் – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும் எனவும், தேவை ஏற்படின் பின்னர் மேலும் நீடிக்கப்படும் எனவும் பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.