Home செய்திகள் யாழில் முதல் வேட்புமனுவை தாக்கல் செய்த பெளத்த பிக்கு!

யாழில் முதல் வேட்புமனுவை தாக்கல் செய்த பெளத்த பிக்கு!

94
0

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுவை பெளத்த சிங்களக் கட்சியான “ஜனசெத பெரமுன கட்சி” யின் சார்பில் பத்ரமுல்லை சீலரத்தின தேரர் வேபு மனுவை தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (12/03) காலை 9.30 மணிக்கு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஆழ்வாப்பிள்ளை குருகுலன் தலைமையிலான சுயேச்சைக்குழுவும், இன்று யாழ். மாவட்ட செயலயகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.