Home உலக செய்திகள் ஏப்ரல் 15 வரை இந்தியாவிற்குள் நுளைய பயணிகளுக்கு தடை!

ஏப்ரல் 15 வரை இந்தியாவிற்குள் நுளைய பயணிகளுக்கு தடை!

116
0

கொரோனா வைரஸ் தொற்று, பரவாமல் தடுக்கும் விதமாக இந்தியாவிற்கு வர வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் நாளை முதல் ஏப்.,15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் “சர்வதேச தொற்று நோய்” என உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியாவிலும் வைரஸ் தாக்குதலுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டமையால், நாடுபூராகவும் வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் நுழைவதற்காக பயணிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து வீசாக்களையும் ரத்துச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. 1. பெப்ரவரி,15க்கு பிறகு, இத்தாலி, ஈரான், சீனா, தென்கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் உட்பட அனைத்து சுற்றுலா பயணிகளும், கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும்.
  2. 2. பொதுவாக விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (ஓ.சி.ஐ) அட்டை வைத்திருப்பவரகள் உட்பட அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் நாளை (13/03/2020) முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
  3. 3. ஐ.நா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
  4. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.