Home Uncategorized யாழ் விவசாய பீட மாணவர்களை சந்தித்தார் சுவீடன் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா:

யாழ் விவசாய பீட மாணவர்களை சந்தித்தார் சுவீடன் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா:

68
0

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இயங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவன மாணவர்களுக்கும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்-மருதனார்மடம் விவசாய கல்லூரி மண்டபத்தில் நேற்று (10/03) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

சுவீடன் நாட்டை வதிவிடமாகவும், அந் நாட்டிலேயே பேராசிரியராகவும் கடமையாற்றிவரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் தமிழ் மொழி மீதும், மண் மீதும் அளவற்ற பற்றுக்கொண்டவர். தமிழர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் எங்கெல்லாம் தமிழர்கள் இன்னல்களுக்கு உள்ளாகிறார்களோ அவர்களுக்காக துடிப்போடு செயற்படுவர். ஈழ விடுதலைப் போராட்டத்திலும் அவரது பங்கு இன்றியமையாதது.

அங்குள்ள மாணவர்கள் மத்தியில் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் தனது கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள், கல்வி என்பது வெறும் ஏட்டில் எழுதுவதோடு மட்டும் அல்ல, நேரடியாக அனுபவங்களை பெற்று அதனை வாழ்வு முறையாக்கி கற்பது தான் சிறப்பு என மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவன அதிபர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.