Home செய்திகள் யாழில் – ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

யாழில் – ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

87
0

கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்துள்ளனர்.

“தெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கே இவ்வாறு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் கிடைத்துள்ளது.

பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார்.

இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் மனவேதனையுடன் இருந்த குறித்த தம்பதிகள் தற்போது ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறித்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமாக நான்கு குழந்தைகளும் சுகப்பிரசவம் மூலமே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.