Home தாயக செய்திகள் இலங்கையில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 407 பயணிகள்!

இலங்கையில் 3 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 407 பயணிகள்!

114
0

இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள இலங்கை பயணிகள் 407 பேர் தனிமை படுத்தப்பட்டு “கொவிட் – 19 என்ற வைரஸ் தொற்று” நாட்டுக்குள் பரவால் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, குறித்த பயணிகளை பொலன்னறுவை, கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு 17 பஸ்களில் இராணுவத்தினர் அவர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில் 132 ஆண்களை தனிமைப்படுத்தி கந்தக்காடு பகுதிக்கும், 171 பெண்கள், மற்றும் சிறுவர்களை மட்டக்களப்பிற்கும், ஏனையவர்களை பொலனறுவைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவர்களுள் தங்களை தனிமை படுத்துவதை விரும்பாலும், பேறூந்துகளில் ஏற மறுத்தவர்களையும், வலு கட்டாயமாக இராணுவத்தினரின் உதவியுடன் இராணூவ உலங்குவானூர்திகளில் ஏற்றி சென்றதாகவும் அறியமுடிகிறது.