Home செய்திகள் யாழில், சமூக சீர்திருத்ததிற்கான எச்சரிக்கை சுவரொட்டிகள்!

யாழில், சமூக சீர்திருத்ததிற்கான எச்சரிக்கை சுவரொட்டிகள்!

110
0

இனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவித்து குறித்த துண்டு பிரசுரத்தில் தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள்” என குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் பல்கலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தேசத்தின் கலை,பண்பாடு கலாசாரம் இவற்றை கருத்தில் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும்.

எமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை இனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

பெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தண்டனை வழங்கப்படும்.

இளைஞனார்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எவராலும் காப்பாற்ற முடியாமல் போகும்

எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.

இங்கு இனி வாய்ப்பேச்சுக்கு இனி எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார்? எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும்.

எமது கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பது எமது கடமை.

இனிவரும் காலங்களில் சமூக விரோத செயல்களுக்கு குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

என தில் குறிப்பிடப்பட்டுள்ளது.