Home உலக செய்திகள் பிரித்தானியாவில் ஐந்தாவது நபரும் மரணம் – 24 மணித்தியாலத்தில் 46 கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்கள் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் ஐந்தாவது நபரும் மரணம் – 24 மணித்தியாலத்தில் 46 கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்கள் கண்டுபிடிப்பு!

123
0

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளநிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் உயிரிழந்துள்ளார் என பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு உயிரிழந்தவர் ரோயல் வூல்வர்ஹம்ரன் (Royal Wolverhampton) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான பெண் ஆவார்.

உயிரிழந்தவருக்கு உள்நாட்டிலேயே வைரஸ் தொற்றியுள்ளது என்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை அறிந்து அவர்களை பரிசோதனைக்குட்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவின் National Health Service எனப்படும் NHS வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரித்தானியாவில் இது தற்போது ஆரம்ப கட்டதிலேயே உள்ளதாகவும், நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனம்காணப்பட்டும், தனிமைபடுத்தப்பட்டும் சிகிச்சைகளும், ஆராச்சிகளும் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, மக்கள் அதிக பயம் கொண்டுள்ளதை உணர முடிவதாகவும், அதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை விடும்படி கோரப்பட்டும் வருகிறது. எம்மைப் பொறுத்தவரை அதற்கான அவசியம் தற்போது இல்லை. சீனாவைப் போன்று அதிகளவான தாக்கத்திற்கு பிரித்தானியா உட்படும் நிலை ஏற்பட்டால் அப்போது அது தொடர்பில் ஆராய்வோம். எனவும் குறிப்பிட்டுள்ளது.