
திருகோணமலை – கோவிலடி சந்தியில் இருந்த சிறிய புத்தர் சிலை ஒன்று நேற்றைய தினம் உடைக்கப்பட்ட சம்பவத்தோடு தொடர்புபடுத்தி முன்னாள் போராளி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் (42 வயது) எனவும், நீண்டகால தடுப்பின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர் எனவும் தெரிவித்துள்ள காவல்துறை, சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் எனவும், அதற்காக மாதா மாதம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பதிவு அட்டையையும் அவரிடம் இருந்து மீட்டதாகவும் கூறியுள்ளனர்.
இந் நிலையில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட இடத்திற்கு விஜயம் செய்த தம்பலகாமம் விகாரையின் விகாராதிபதி அதே இடத்தில் ஒரு புத்தர் சிலையை உடனடியாகவே நிறுவிச் சென்றுள்ளார்.