
2000ஆம் ஆண்டில் மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் 8 தமிழர்களை கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலையாழியான “இராணுவ சிறப்பு படைப்பிரிவை சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க” ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிங்கள செய்தி பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதமன்றத்தினால் சில வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பான வழக்கில் சுனில் ரத்னாயக்கவுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இருப்பினும் யுத்த காலத்தில் அவரின் பணிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பில் அவரை விடுதலை செய்யவுள்ளதாக அந்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.