Home செய்திகள் முல்லைத்தீவில் 3 புதிய இராணூவச் சோதனைச் சாவடிகள்!

முல்லைத்தீவில் 3 புதிய இராணூவச் சோதனைச் சாவடிகள்!

97
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் இராணுவத்தினர் புதிதாக சோதனைச் சாவடிகளை அமைத்து போக்குவரத்தில் ஈடுபடும் மக்களை சோதனையிட்டு வருகின்றனர்.

மாங்குளம் -முல்லைத்தீவு பிரதான வீதியிலும், முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியில் சிலாவத்தை பகுதியிலும் இவ்வாறான புதிய இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையால் போக்குவரத்தில் சிரமங்கள்உம், தாமதங்களும் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்ச நிலையையும் தோற்றுவித்துள்ளது.

வட பகுதி மக்களை தொடர்ந்தும் அச்ச சூழலுக்குள் அச்சுறுத்தி வைத்திருக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.