Home செய்திகள் “மீன் சின்னத்தில்” போட்டியிடுகிறதாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி!

“மீன் சின்னத்தில்” போட்டியிடுகிறதாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி!

75
0

எதிர் வரும் தேர்தலில் “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி” மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று (06/03) யாழ் ஊடக மையத்தில் தெரிவிக்கையில்..

நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கூட்டணியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கறமிறங்குகிறோம். எமது கூட்டணியின் சின்னமாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு “மீன் சின்னம்” வழங்கப் பட்டுள்ளது.

எனவே வடக்கு, கிழக்கு பகுதிகளில் இம் முறைத் தேர்தலில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றார்.