Home செய்திகள் மன்னாரில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னாரில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!

79
0

வட மாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளின் குடும்பங்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு சிறைகளில் பல ஆண்டுகாலங்களாக அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்பதும், இதனால் அவர்களது குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தின் கீழ் இருந்துவருவதால் பெண்கள் பெரிதும் கஷ்டங்கள்ஐ எதிர் நோக்குவதோடு, வருமானங்கள் இன்று அத்தியாவசிய பொருட்கள் உட்பட பிள்ளைகளின் படிப்புக்கு தேவையானவற்றை கூட செய்யமுடியாத அவல நிலை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவுகள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

06/03/2020 இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதியூடாக மன்னார் நகரத்தை அடைந்து மன்னார் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்,

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்,

சட்டமும் நீதியும் சகலருக்கும் பொதுவானது, பொதுமன்னிப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு இல்லையா?

என்கின்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.