Home செய்திகள் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டது 8 பேர் மட்டுமே: கோட்டபாய தெரிவிப்பு

படையினரால் காணாமல் ஆக்கப்பட்டது 8 பேர் மட்டுமே: கோட்டபாய தெரிவிப்பு

99
0

ஒரு சில பிரத்தியேகமான சம்பவங்களை வைத்துக் கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை சிலர் அரசியலுக்காக பொதுப் பிரச்சனையாக மாற்ற முயல்வதாகவும், எட்டு (8) பேரை மட்டுமே படையினர் கொண்டு சென்றதை யுனிசெவ் நிறுவனமே பதிவு செய்துள்ளதாகவும் கோட்டபாய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கஇயிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொருளாதார ஏற்றத் தாழ்வையும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தையும் சிலர் அரசியலாக்கி ஆதாயம் காண முனைகின்றனர். அத்தோடு சம வாய்ப்பு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமானது அல்ல, அது சிங்கள, மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் அதில் குறைபாடுகள் உண்டு. 

அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம். யுத்த காலத்தில் உயிரிழந்த படையினரைப் போல யுத்தத்தில் பலியான புலிகள் இயக்க உறுப்பினர்களின் சடலங்களும் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அது யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவம்.

ஆனால் சரணடைந்தவர்களை காணவில்லை என சிலர் சொன்னாலும், யுனிசெவ் நிறுவனம் நடாத்திய ஒரு கணக்கெடுப்பில் வெறும் எட்டு பேர் (8) மட்டுமே படையினர் கொண்டு சென்றதாக சொல்லியிருக்கிறார்கள். அதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஏனைய சுமார் “2000 சம்பவங்களும்” புலிகள் இயக்கத்தில் செயற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தான் உண்மை. 

ஆகவே வேண்டுமானால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை சரியாக உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுக்கஅன மரணச் சான்றிதழை பெற்றுக்கொடுக்க முடியும். சில வேளைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் வெளி நாடுகளில் இருந்தும் வரக்கூடும் என கூறினார்.