Home செய்திகள் இலங்கையில் அச்ச சூழலும், அச்சுறுத்தல்களும் அதிகரிப்பு – மனித உரிமை கண்காணிப்பகம்!

இலங்கையில் அச்ச சூழலும், அச்சுறுத்தல்களும் அதிகரிப்பு – மனித உரிமை கண்காணிப்பகம்!

61
0

கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி வந்ததன் பின்னர் இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கான சூழல் குறைவடைந்துள்ளதுடன், அச்சுறுத்தல்க்அளும், அச்ச நிலையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த 15 மனித உரிமை பணியாளர்களிடம் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

ராஜபக்ச குடும்ப அரசாங்கம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இலங்கையில் அச்ச சூழல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள சரவதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாயியாவிற்கான இயக்குனர் நீனாக்சி கங்குலி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதும், அழுத்தங்கள்உம், வன்முறைகளும் அதிகரித்துள்ளது என்றும், ஊடகவியலாளர்கள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான மரண அச்சுறுத்தல்களில் அரச பாதுகாப்பு இயந்திரத்திற்கு தொடர்பிருப்ப்அது புலனாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் மீண்டும் இராணுவ நடமாட்டங்களும், காவலரண்களும் அதிகரித்துள்ளதோடு, பாதுகாப்பு நடவடிக்கை எனும் போர்வையில் துன்புறுத்தல்களும், சிலர் மீது தாக்குதல்களும், அதிகரித்துள்ளது. 

அது மட்டுமன்றி மர்மமான முறையில் பல மரணங்கள் இடம்பெறுவதும், உடல்கள் கண்டெடுக்கப்படுவதும் அண்மைக்காலமாக நடந்துவருவதை காண முடிகிறது.

இவ்வாறான நிலைமைகள் மீண்டும் இலங்கையை பழைய நிலைக்குள் கொண்டுசெல்வதையே எடுத்துக்காட்டுவதாகவும், மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.