Home செய்திகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படும் இலங்கை பாராளுமன்றம்:

நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படும் இலங்கை பாராளுமன்றம்:

60
0

எதிர் வரும் தேர்தலை முன்னிட்டு நாளை (02/03) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தற்காலிக “காபந்து” அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று கோட்டபாய ராஜபக்ச தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின் சரியாக ஆறு மாத காலப்பகுதியில் இன்னுமோர் தேர்தலை நடாத்தி அதிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் எனும் நோகுடன் காய்களை நகர்த்தி வருகிறது கோட்டபாய அரசு.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு 8ம் இலக்கம் மிக அதிஷ்டமாக கருதுவதால் அதே 8ம் இலக்கத்தை கொண்ட ஏப்ரல் 17 இல் இத் தேர்தலையும் நடாத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் தமிழர்கள் மட்டுமன்றி ஏனைய இனத்தவர்களும் அதிர்ப்தி அடைந்துள்ளதுடன் அச்சமும் கொண்டுள்ளமையினால் இத் தேற்தல் சற்று வித்தியாசமான முடிவுகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிலையில், நாளை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு பின்னர் தேர்தல் முடிவடையும் வரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில் – அரசாங்கத்தின் அமைச்சர்களும், அதன் அமைச்சரவையும் மாத்திரம் செயற்பாட்டில் இருக்கும்.

ஆனால் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் அதிகாரங்கள் செயலிழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.