Home செய்திகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக க.விமலநாதன் நியமனம்!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக க.விமலநாதன் நியமனம்!

128
0

மட்டக்களப்பை சேர்ந்த க.விமலநாதன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர், மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக க.விமலநாதன் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.