Home உலக செய்திகள் சுவிஸ் – ஜெனீவாவில், முருகதாசனனின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

சுவிஸ் – ஜெனீவாவில், முருகதாசனனின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

91
0

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் தன்னை தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் நீதிகேட்டு உயிர் தியாகம் செய்த “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு தினமான இன்று அதே இடத்தில் நினைவுவணக்க நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடாகியுள்ளது.

சுவிஸ் – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று (12/02) புதன்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெறவுள்ள நிகழ்வில் ஈகியர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் வருமாறு ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.