
தைப்பூசத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்று நேற்றையதினம் (08/02) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சவாரிப் போட்டி விசுவமடு தொட்டியடி சவாரித்திடலில் நடைபெற்றது.
இதில் ஐந்து பிரிவுகளில் வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் 73 சவாரி வண்டிகள் (73 சோடி மாடுகள்) கலந்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.