
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடந்தால் தமிழர்கள் வாழ்ந்ததற்கான, ஆண்டதற்கான அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு தனிச் சிங்கள தேசமாக மாற்றப்படும் அபாயம் உள்ளது. தற்போதைய அரசாங்கம் சிங்கள பெளத்த நாடாக இலங்கைத் தீவை முழுமையாக மாற்ற பல வழிகளிலும் முனைந்து அதற்கான செயற்திட்டன்க்களையும் செய்துவருவ்அது கண்கூடு.
வடக்கு , கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழி என்றும் பலபிட்டிய பகுதியில் நடைப்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துரைத்த அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்…
தொல்லியல் பாதுகாப்பு செயற்பாடுகளை உயர் ஒழுக்க விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும், அதனால் அவற்றின் மீது முழுமையாக அதிகாரத்தை செலுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதே கடிமாக உள்ளது. வடக்கு, கிழக்கிலேயே அதிகளவான தொல்லியல் சின்னங்கள் இருக்கின்றன.
வடக்கு கிழக்கில், இனமத மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் தொல்லியல் சின்னங்கள் சிதைவடையலாம். என்றும் அவர் தெரிவித்தார். அப்படியாயின் அடுத்த இனக்கலவரத்திற்கு தயாராகிறதா கோட்டபாய தலைமையிலான அரசாங்கம்…?