
தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள கல்லறைமுன்பாக எதிர்வரும் 12-02-2020 புதன்கிழமை நடைபெறவுள்ளது.
வடமேற்கு இலண்டனில் ஹெண்டன் பகுதியில் Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள அவரதும், ஈழத்தமிழர் விதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து தமிழர்களின் உரிமைக்காக தங்கள் உயிர்களை தீயிற்கு இரையாக்கிய 21 தியாகிகள் நினைவாகவும் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக இன் நிகழ்வு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
பெப்ரவரி 12ம் திகதியை “ஈகியர் நினைவு தினமாக” பிரித்தானியாவில் கடைப்பிடிக்கப்பட்டு அன்றைய தினம் 21 ஈகியர்களின் திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிளை உறுப்பினர்கள், வீரத்தமிழர் முன்னணியின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் உட்பட பிரித்தானியாவில் வாளும் தமிழக, மற்றும் ஈழத் தமிழர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

