Home செய்திகள் யாழ். பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ள பகிடிவதைக்கு எதிராக ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ள பகிடிவதைக்கு எதிராக ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!

66
0

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ள பகிடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசிமூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்தே ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 10.00 மணியளவில் ஒன்றுகூடியுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள், பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறன துன்பியல் சம்பவங்கள் நிகழாது தடுக்கும் முகமாகவும் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாடி வருகின்றனர்.

இது ஆளுநரின் ஊடகப்பிரிவு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில்

இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில் அண்மை காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் பல அசௌகரியங்களை சந்திப்பதும்இ கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் அவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. வட மாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும் என குறிப்பிடப்படுள்ளது.