Home செய்திகள் 259 பேர் பலியாவதை தடுக்கத் தவறிய உயர் அதிகாரிகளுக்கு பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்று!

259 பேர் பலியாவதை தடுக்கத் தவறிய உயர் அதிகாரிகளுக்கு பிணை வழங்கியது கொழும்பு நீதிமன்று!

107
0

கடந்த ஆண்டு இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலையும், அதில் கொல்லப்பட்ட 259 பேரின் உயிரிழப்புக்களையும் தடுக்க தவறிய உயர் அதிகாரிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கையெடுக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனான்டோ கைது செய்யப்பட்டு கடந்த 4 மாத காலங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமையும், அப்போது பொலிஸ் மா அதிபராக கடமையில் இருந்த பூஜித ஜயசுந்தரவும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டவர்களை இலங்கை அரசு விடுவித்து வருவதானது பெரும்பான்மை சிங்களவர் சர்வாதிகார ஆட்சியை வெளிப்படுத்தி நிற்கின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் 45 பேர் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.