Home செய்திகள் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த 3 ஆண்டிற்கான பேரவைக்கு 14 உறுப்பினர்கள் தெரிவு:

யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த 3 ஆண்டிற்கான பேரவைக்கு 14 உறுப்பினர்கள் தெரிவு:

72
0

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேரவைக்கு 14 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நியமிக்கப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் உள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு செயற்படும்.

வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், கலாநிதி ஆறு. திருமுருகன், வெளிநாட்டு தூதரக மூன்றாம் நிலைச் செயலர் விதுர்சன் வின்சன்ற் ராஜாராம், சட்டத்தரணி ஆர்.ரி.விக்னராஜா (முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர்), கலாநிதி சுரேன் ராகவன் (முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர்), நொத்தாரிசு மார்க்கண்டு திருவாதவூரன், பொறியியலாளர் விஸ்வலிங்கம் சுதாகர் (வீதி அபிவிருத்தி அதிகார சபை), தனியார் விவசாய நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் தில்லையம்பலம் விமலன், முன்னாள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பொன்னையா தியாகராசா, கணக்காளர் வி.கனகசபாபதி, கோடீஸ்வரன் ருசாங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.