Home முக்கிய செய்திகள் சிங்களம் மட்டும் சட்டத்தோடு சிறீலங்காவில் இடம்பெற்ற “சுதந்திரதின விழா”

சிங்களம் மட்டும் சட்டத்தோடு சிறீலங்காவில் இடம்பெற்ற “சுதந்திரதின விழா”

92
0

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சிங்களம் மட்டும் எனும் தொணிப் பொருளோடு “சிறீலங்காவின் சுதந்திரதின விழா” சிங்களவர்களால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்றது.

04-02-2020 இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தின தேசிய விழா கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட 2500 பேர் வரையிலான அதிதிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வு வழமையை விடவும் மிகவும் சாதாரணமான முறையிலேயே நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சுதந்திர தின நிகழ்வுகளின் இறுதியில் தமிழ் தமிழ் மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படுவதும் இம்முறை நீக்கப்பட்டிருந்தமை சிங்கள, பெளத்த பேரினவாதத்தின் ஶ்ரீவாதிகாரத்தை வெளிப்படுத்தியிருந்தது.

காலை 8.40 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் பிரதான நிகழ்வுகள் ஆர்பிக்கப்பட்டது. ஜனாதிபதி கொடியேற்றிய பின்னர் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் இதேவேளை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும், கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.