
ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் உணவு விஷமடைந்ததன் காரணமாக, கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டதாகவும், அதனை உட்கொண்ட பின்னரே மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.