Home செய்திகள் சஜித் தலைமையில் 35 உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியில் இருந்து வெளிநடப்பு!

சஜித் தலைமையில் 35 உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியில் இருந்து வெளிநடப்பு!

108
0

சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து கொழும்பு மாநாகர முதல்வர் ரோஷி சேனநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, அஜித் பெரேரா மற்றும் பக்கீர் மக்கார் ஆகியோர் நீக்கப்பட்டதை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளனர்.