Home கல்லறை மேனியர் “தியாகி முத்துக்குமார்” நினைவு தினம் இன்று!

“தியாகி முத்துக்குமார்” நினைவு தினம் இன்று!

169
0

2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி, இனப்படுகொலைக்கு வல்லாதிக்க இந்திய அரசு துணைபுரிவதை கண்டித்து தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர்நீத்த “தியாகி முத்துக்குமார்” அவர்களின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இறப்பதற்கு முன்னர் அவர் வழங்கிவிட்டு சென்ற மரணசாசனமும், அதைத் தொடர்ந்து ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் முத்துக்குமார் வழியில் தன்னை தீயிற்கு இரையாக்கி நீதிகேட்டு சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வைத்த ஈகைப்பேரொளி முருகதாசனின் மரண சாசனமும் தான் பின்னாளில் தமிழகம் உட்பட சரவ்தேசம் எங்கும் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தை எழுச்சியடைய செய்திருந்தது.

தியாகி முத்துக்குமாரின் மரணசாரசத்தில் குறப்பிடப்பட்டிருந்த முக்கிய விடையங்கள்….

“உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.

என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என தனது மரண சாசனத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் கூறியிருந்தார்.

அதன் வழியில் முன்னெடுக்கப்பட்ட உணர்வாளர்களின் போராட்டம் தான் தமிழகத்தில் உறங்கிக்கொண்டிருந்த மானுட அறத்தை சிறிதேனும் உசுப்பியது.