Home செய்திகள் இராணுவத்தை தாக்கிய வழக்கில் கைதான 8 பேரும் பிணையில் விடுதலை:

இராணுவத்தை தாக்கிய வழக்கில் கைதான 8 பேரும் பிணையில் விடுதலை:

83
0

பொங்கல் தினத்தன்று வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தை தாக்கிய சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதான 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும், தலா 5,000 ரூபா தண்டமும் அறவிட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கில் கைதானவர்களின் குடும்பங்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன் தான் இந்த வழக்கில் ஆஜராகப்போவதாக கூறியுள்ளார்.