Home முக்கிய செய்திகள் வடக்கில் பரவலாக இராணூவச் சோதனைச் சாவடிகள் – மக்களை படம் பிடித்து அச்சுறுத்தும் இராணுவம்!

வடக்கில் பரவலாக இராணூவச் சோதனைச் சாவடிகள் – மக்களை படம் பிடித்து அச்சுறுத்தும் இராணுவம்!

118
0

இலங்கையின் வடபகுதியில் பரவலாக புதிதாக பல இராணுவச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் A9 – கண்டி வீதியில் புதிதாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கு ம் நிலையில், பயணிகள் பேருந்துகள் தொடக்கம் தனியார் வாகனங்கள் வரை சகல வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், மக்கள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டு சோதனை கெடுபிடிகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாகவுள்ள சோதனை சாவடியில், மக்கள் வாகனங்களில் இருந்து கீழே இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கை இடம்பெற்ற போது இராணுவத்தினர் மக்களை படம் பிடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இதனால் மேலும் தமிழ் மக்களை அடக்கி ஆளவும், அச்ச நிலையில் வைத்திருக்கவுமே கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் முனைவது வெளிப்படையாகின்றது.