
பாடசாலைகளில் வருடத்தில் மூன்று தவணைகள் இடம்பெற்றுவரும் பரீட்சைகளை அடுத்த வருடம் முதல் இரண்டு தடவைகள் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக பதில் கல்வி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வருட நடுப்பகுதியிலும் மற்றும் வருட இறுதியிலும் மாத்திரம் தவணை பரீட்சைகளை நடத்துவதற்கு ஆராயப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.