
முரசுமோட்டைப் பகுதியில் இன்று (25/01) சனிக்கிழமை இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியால் வந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றை பின்புறமாக வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது டிப்பர் வாகன சாரதி உட்பட பஸ்ஸில் பயனித்தவர்களில் 10 பேருமே காயமுற்றனிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவருகிறது.
