Home செய்திகள் மனைவியை கொலை செய்த பின் தானும் கழுத்தை அறுத்த கணவன்! கிளி நொச்சியில் சம்பவம்.

மனைவியை கொலை செய்த பின் தானும் கழுத்தை அறுத்த கணவன்! கிளி நொச்சியில் சம்பவம்.

105
0

கிளிநொச்சி – கண்டாவளை பகுதியில் தனது இளம் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25/01) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது 2 வயதுடைய சுகந்தன் சகுந்தலா என்ற இளம் குடும்பப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த பெண்ணின் சகோதரியும் வெட்டுக் காயத்துக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.