Home உலக செய்திகள் உலகை உலுப்பி வரும் “ஹொறொனா வைரஸ்” – 6 மாதத்தில் 65 மில்லியன் மக்கள் இறக்கலாம்...

உலகை உலுப்பி வரும் “ஹொறொனா வைரஸ்” – 6 மாதத்தில் 65 மில்லியன் மக்கள் இறக்கலாம் என எச்சரிக்கை!

363
0

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இது பரவினால் 18 மாதங்களில் உலகம் முழுவதுமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவ பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த மருத்துவ பரிவோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவம் எரிக் டொனர் கூறுகையில் முதற்தடவையாக சீனா புகான் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவியிருந்தமை தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுவதாகவும் இது உலகம் முழுவதும் 6 மாதத்திற்குள் பரவும் நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆட்கொல்லி வைரஸ் வேகமாக பரவிய சம்பவம் 1918 காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்பானில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து அதனால் உலகம் முழுவதும் 500 மில்லியன் பேர் வரையிலானோர் பீடிக்கப்பட்டதுடன் 50 மில்லியன் வரையானோர் உயிரிழந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தற்போதைய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வாறு பரவினால் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பமான வைரஸ் தொற்று அவுஸ்திரெலியா , அமெரிக்கா , பிரான்ஸ் , சிங்கப்பூர் , கொங்கொங் , தாய்லாந்து , தென்கொரியா , நேபாளம் , தாய்லாந்து , தாய்வான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.