Home செய்திகள் சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க...

சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும்: பிரதமர்.வி.ருத்ரகுமாரன்

77
0
Transnational Government of Tamil Eelam Prime Minister Visvanathan “Rudra” Rudrakumaran

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ விரும்புகின்றார்கள் என கூறும் எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கான வழிமுறையாக அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில்,

எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று உண்மைக்கு புறம்பானது. அது அவருக்கே நன்கு தெரியும்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாகவும், தற்போது நடைபெற்ற வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுத்து நிறுத்துவதற்கும் ஒரே வழி சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழம் தான்.

தமிழர் தாயகத்தில் உள்ள தமிழ்மக்கள் தமது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தை வெளிப்படையாக கூறாமல் இருப்பதற்கான காரணங்களாக, 2009க்கு முன்னர் இருந்த பலம் தற்போது இல்லை என்பது மட்டுமல்ல, நடைமுறையில் உள்ள சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டமுமே ஆகும்.

ஆகவே சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டத்தினை நீக்கிவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் உழைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1977ம் ஆண்டு நடந்த தேர்தல் என்பது ஆறாம் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னராக நடந்த ஒரு தேர்தல். அதாவது முழுமையான ஒர் அரசியல் வெளியில் நடந்த தேர்தல் அது. அதற்கு பின்னராக வந்த தேர்தல்கள் எல்லாம் ஆறாம் திருத்தச்சட்டம் உள்ளடக்கப்பட்ட ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளியில் நடந்த தேர்தல்கள். இவற்றினை அடிப்படையாக கொண்டு 1977ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையினை, அவர்களது அரசியல் பெருவிருப்பினை மாற்றமுடியாது. என்றும் தெரிவித்துள்ளார்.