Home உலக செய்திகள் “இன விடுதலைக்கான திட்டமும் செயல்பாடுகளும்” எனும் தொனிப்பொருளில் லண்டனில் கருத்தரங்கு!

“இன விடுதலைக்கான திட்டமும் செயல்பாடுகளும்” எனும் தொனிப்பொருளில் லண்டனில் கருத்தரங்கு!

165
0

“இன  விடுதலைக்கான திட்டமும் செயல்பாடுகளும்” எனும் தொனிப்பொருளில் லண்டனில் ஒன்றுகூடல் ஒன்று நடைபெறவுள்ளது.

தமிழ் நாட்டில் இருந்து பிரித்தானியாவிற்கு வருகைதந்துள்ள நாம்தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினரும், பேராசிரியருமான திரு.கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில் இக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

சிதறிக்கிடக்கும் உணர்வாளர்களை ஒன்று குவித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை இள்வாங்கி தமிழின விடுதலையை விரைவுபடுத்தும் நோக்கில் இக் கூட்டம்
எதிர் வரும் 26-01-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை Southend Hall, Southend road, Eastham, E6 2AA எனும் முகவரியில் இடம்பெறவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிளையினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந் நிகழ்வில் தமிழின விடுதலை ஆர்வலர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்தியீவிகள் என அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.