Home செய்திகள் ஆதன வரியை குறைக்க வலியுறுத்தி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கிளிநொச்சி வர்த்தகர்!

ஆதன வரியை குறைக்க வலியுறுத்தி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கிளிநொச்சி வர்த்தகர்!

83
0

கிளிநொச்சி நகரின் பிரபல வர்த்தக நிலையமான தமிழ் கங்கை ஹாட்வெயார் உரிமையாளர் குமாரசாமி மகேந்திரன் இன்று காலை 9.00 மணி முதல் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் 10 வீதமாக அதிகரிக்கப்பட்டு மக்களிடம் அறவிடப்படும் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை 04 வீதமாக குறைக்கக் கோரியுமே குமாரசாமி மகேந்திரன் இப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலைய வர்த்தகர்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் வர்த்தக சமூகம்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த ஆதன வரியானது இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த வீதமான பத்து வீதமாக அறவிடப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.