
யாழ் – பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (22/01) மதியம் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரை பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர் பேருவளையை சேர்ந்த காஞ்சனா ராெஷானி (29) என்ற சிங்கள மாணவி என அடையாளம் காணப்பட்டார்.
அதேவேளை, தப்பியோடிய கொலையாளி அங்கு நின்ற மக்கள் மடக்கிப்பிடித்ததை அடுத்து காவல்துறையினர் குறித்த கொலையாளியை கைது செய்து கொண்டுசென்றனர்.
கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட கொலையாளி ஆவார்.
இந்த கொலைச் சம்பவம் காதல் பிரச்சினை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
