Home செய்திகள் மிருசுவில் பகுதியில் ஆலய குருக்கள் கொலை! வீதியோரமாக மீட்கப்பட்ட சடலம்!!

மிருசுவில் பகுதியில் ஆலய குருக்கள் கொலை! வீதியோரமாக மீட்கப்பட்ட சடலம்!!

90
0

யாழ்-தென்மராட்சியை சேர்ந்த மிருசுவில் பகுதியில் காயங்களுடன் வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது.

66 வயதுடைய ஆலய பூசகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்று காலை குறித்த சடலத்தை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை பொறுப்பேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் அவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.