Home செய்திகள் தெரிவுக்குழுவிற்கான பெயர் பட்டியலுக்கு இன்று அனுமதி!

தெரிவுக்குழுவிற்கான பெயர் பட்டியலுக்கு இன்று அனுமதி!

97
0

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குபத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சபாநாயகர் தலைமையிலான 17 பேரடங்கிய தெரிவுக் குழுக்களுக்கான பெயர்ப் பட்டியலுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.