
மன்னார் – செல்வாரி கிராமத்தில் தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை நேற்று முந்தினம் (18/01) சனிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்த அமைச்சர் விமல் வீரவன்ச அதில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்ததை கண்டு கோபம் அடைந்ததுடன் உடனடியாகவே அதனை மாற்றி சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த பெயர்ப் பலகையில் முதலில் தமிழிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தமை தற்போது மாற்றப்பட்டு சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தரவிற்கு அமைய சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் சிங்கள துவேசம் மிக்க அமைச்சரான விமல் வீரவன்சவால் வடக்கு கிழக்கில் அமையப்போகும் கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சிங்களவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்ற சந்தேகமும் அபாயமும் தோன்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.