Home உலக செய்திகள் லண்டனில் 500 க்கும் மேற்பட்ட மக்களோடு கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் பெருவிழா!

லண்டனில் 500 க்கும் மேற்பட்ட மக்களோடு கோலாகலமாக இடம்பெற்ற பொங்கல் பெருவிழா!

611
0

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இலண்டனில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

வீரத்தமிழர் முன்னணியின் பிரித்தானியக் கிளையினரின் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், கவின்ஷிலர்ஸ், மேயர் என பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழர்களின் ஆதி வாத்தியமான பறை இசை முழங்க பின் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களும், கவுன்சிலர்ஸ், வீரத்தமிழர் முன்னணி செயற்பாட்டாளர், மாவீரர் பெற்றோர் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்கள் என பலராலும் மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.

பிரித்தானியத் தேசியக் கொடி, தமிழீழ தேசியக் கொடி, தமிழ் நாட்டு தேசியக் கொடி மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் கொடி ஆகியன அந்தந்த கொடிக்குரிய பாடலுடன் ஏற்றிவைக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கே திறந்த வெளியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த 150 அடுப்புகளிலும் அதன் முன் பொங்கலுக்கு தயாராக இருந்த குடும்பங்களால் ஒரே நேரத்தில் பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.

தமிழுக்காகவும், தேச விடுதலைக்காகவும், தம் வாழ்வையும், உயிரையும் அர்ப்பணித்த தியாகிகளின் திருவுருப்படங்கள் சூழ திறந்த வெளியில் இடம்பெற்ற இந்த நிகழ்வு மெய்சிலுர்க்கவைக்கும் நிகழ்வாக தாயகத்தில் மக்கள் ஒன்றாக கூடி நினரது போல் உணர்வை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அநைவரது பொங்கலும் நிறைவுற்று சூரிய தேவனுக்கு படைத்த பின்னர் மண்டபத்தினுள் தமிழர் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள் உட்பட முக்கிய பிரமுகர்களின் உரைகளும் அரங்க நிகழ்வாக நடந்தன.

இந் நிகழ்விற்கு தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய உறுப்பினரும், பேராசிரியருமான திரு.கல்யானசுந்தரம் அவர்கள்சிறப்புரை ஆற்றியபோது அரங்கமே அதிர்ந்துபோனது. அவரது உரையில் பொதிந்திருந்த விடையங்களும், வீராவேசப் பேச்சும் அங்கிருந்தவர்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.