Home செய்திகள் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை 3 மாதங்களில் இயங்குமாம்…! தமிழர்களிடம் இருந்து கைமாறுகிறதா..?

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை 3 மாதங்களில் இயங்குமாம்…! தமிழர்களிடம் இருந்து கைமாறுகிறதா..?

81
0

கடந்த 36 வருடங்களாக மூடப்பட்டிருன்த முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவ்ர் மேலும் தெரியப்படுத்தியதாவது,

“1983ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீண்டும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் இப்போது தீர்மானித்திருக்கிறது.

இதனூடாக இப்பிரதேச மக்களுடைய பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு நாட்டு மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். இதற்காக புதிய தலைவரையும் நியமித்துள்ளோம்.

அத்தோடு எதிர்காலத்தில் தொழிற்சாலையில் பழுதடைந்த இயந்திரங்களுக்குப் பதிலாக ஒரு பகுதியினர் ஊடாக புதிய இயந்திரங்களை பொருத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம் என்று அவ்ர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கருத்தில் “புதிய தலைவர்” மற்றும் “ஒரு பகுதியினர் ஊடாக” எனும் சூசக வார்த்தைகள் அடங்கியிருந்தன. ஆகவே யார் புதிய தலைவர்…? எந்த பகுதியினர் ஊடாக …? போன்ற கேள்விகளும், தமிழர் தாயகப் பகுதி தொழிற்சாலை வேறு யாருக்கோ தாரைவார்க்கப்படுகிறதா என்ற அச்சமும் எழுந்துளது.

இன்று (17/01) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் கைத்தொழில், சிறு கைத்தொழில், அரசு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலையை பார்வையிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.