Home செய்திகள் இரண்டாக உடைந்த ஐக்கிய தேசியக் கட்சி – சஜித் தலைமையில் புதிய கட்சி இன்று ஆரம்பம்!

இரண்டாக உடைந்த ஐக்கிய தேசியக் கட்சி – சஜித் தலைமையில் புதிய கட்சி இன்று ஆரம்பம்!

108
0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுக்காத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான விசேட அறிவிப்பொன்று இன்று வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்று (17/01) பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கட்சி தலைமைத்துவத்தை வழங்குமாறு சஜித் அணியீனர் கோரிக்கைகளை முன்வைத்த போதும் அதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருக்கவில்லை. கருஜயசூரிய , சஜித் பிரேமதாச ஆகியோரை ஒன்றிணைத்ததாகவே கட்சியின் தலைமைத்துவம் இருக்க வேண்டுமென ரணில் யோசனையை முன்வைக்கின்ற போதும் அதற்கு இணங்கவில்லை. என தெரியவருகிறது.

இவ்வாறான நிலைமையிலேயே புதிய கூட்டணியை அமைத்து அதனூடாக தேர்தலுக்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சஜித் அணியினர் ஆரம்பித்துள்ளனர்.

சஜித் தலைமையிலான கூட்டணியில் முஸ்லீம் கட்சிகளும், மனோ உள்ளிட்ட சில தமிழ் கட்சிகளும் ஒன்றிணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.