
வினைத்திறண் அற்ற அதிபர்களை நீக்க வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் இன்று (14/01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வேணாவில் சிறீ முருகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாகவே இன்று காலை 7:00 மணி முதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“விநைத்திறண் அற்ற அதிபர்களை நியமிக்காதே”
“சிறீ முருகானந்தா வித்தியாலய அதிபரை உடனடியாக மாற்று”
“பிள்ளைகளின் கல்வியை சீரழிக்காதே”
“எதிர்கால தமிழ் சந்ததியின் வாழ்வை சிதைக்காதே”
போன்ர வாசகங்களும், கோஷங்களும் இப் போராட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
இப்போராட்டத்தில் சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் கலந்துகொண்டிருந்ததோடு வடமாகாண சபையின் உறுப்பினர் ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

