Home செய்திகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் புதிய கூட்டணியும், சின்னமும்!

தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் புதிய கூட்டணியும், சின்னமும்!

130
0

எதிர் வரும் தேர்தலில் களம் இறங்க தமிழர் தரப்பில் இருந்து விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி பற்றியும், தேர்தலுக்கான சின்னம் எது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணியின் சின்னமாக “நிறைகுடம்” தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய கூட்டணியின் பெயராக “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி” மற்றும் “தமிழர் ஐக்கிய முன்னணி” ஆகிய இரு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

விக்னேஸ்வரன் அவர்கள் தற்போது இந்தியா சென்றூள்ல நிலையில் அவர் நாடு திரும்பியதும் பொங்கலை அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.