Home உலக செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

122
0

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான தடைப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உள்ளடக்கி 21 அமைப்புக்கள் மீது தடை விதித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத தடைச்சட்டம் இம் முறை நீக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இப் புதிய பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வழக்குகள் சாதகமான பதில வழங்கியிருந்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமது மக்களுக்களின் உரிமைகளை மீட்கப் போராடும் ஒரு அமைப்பாக தெரிவிக்கப்பட்டும் இருந்தது.

ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக இப் புதிய பட்டியலிலும் பயங்கரவ்ஆத அமைப்பாக “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு” சேர்க்கப்பட்டிருப்பது உலகளாவிய ரீதியில் தமிழர்களை அதிர்ப்திக்குள்ளாகி உள்ளதோடு ஏமாற்றமடையவும் வைத்துள்ளது.